நடிகை நயன்தாரா தற்போது நிறைய பெரிய படங்களில் பிஸியாக உள்ளார். தளபதி விஜய்யின் ‘பிகில்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’, மலையாளத்தில் நிவின் பாலியின் ‘லவ் ஆக்சன் டிராமா’ மற்றும் ‘கொலையுதிர் காலம்’ ஆகியவற்றின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
இவர் தற்போது கிரேக்கத்தில் சான்டோரினியில் தனது விடுமுறையை விக்னேஷ் சிவனுடன் கழித்து வருகிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதில் “அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது” என்று தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B0AP_tbhTtB/?utm_source=ig_web_copy_link
விக்னேஷ் சிவன் கடைசியாக சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியிருந்தார். அவர் தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.