மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் ‘சாஹோ’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள எட்டு நிமிட ஆக்ஷன் காட்சி படமாக்க ரூ 70 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
ரூ 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மெகா பட்ஜெட் படம் ‘சாஹோ’ என்பது அனைவரும் அறிந்ததே. அபுதாபியில் சில ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகளை படமாக்கி உள்ளனர், இந்த ஆண்டு தொடக்கத்தில் அபுதாபியில் சாஹோ குழுவினர் எட்டு நிமிட ஆக்ஷன் காட்சி பதிவு செய்திருந்தனர். இந்த காட்சியில் ரூ. 70 கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் செலவு செய்துள்ளனர். இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி இதுவே. இதுவும் படத்தின் பெரிய சிறப்பம்சங்களாக அமையும்.
இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிலிருந்து பிரபல நடிகர்களில் ஒருவர். இப்படத்தில் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான சாஹோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை UV கிரியேஷன்ஸ் தயாரித்து, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த படம் டி-சீரியஸால் வழங்கப்படுகிறது. அருண் விஜய், ஜாக்கி ஷெரப், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.