V4UMEDIA
HomeNewsKollywood19 வருடங்களுக்கு பிறகு இணையும் உலகநாயகன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!!

19 வருடங்களுக்கு பிறகு இணையும் உலகநாயகன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!!


 

சில நாட்களுக்கு முன்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விக்ரமின் 58வது படத்திற்கு இசையமைக்கிறார் என உறுதிப்படுத்தப்பட்டது. ஜூலை 15 ஆன நேற்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ‘மேகிநம் ஓபஸ்’ படத்திற்கு இசையமைப்பதாக அறிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “லைக்கா நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உலகநாயகன் படத்திற்கு இசையமைப்பது மிகவும் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது” என பகிர்ந்திருந்தார்.

‘ இந்தியன் 2 ‘ படத்தில் உலகநாயகன் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தாலும், ஷங்கர் படம் தனது கடைசி படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே அறிவித்து விட்டார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 3 தற்போது தொகுத்து வழங்குகிறார். இதன் பின் இவர் படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் டுவீட்டை ரீடுவீட் செய்து கமல் அவர்கள் பதிவிட்டுள்ளார். அதில், “உங்கள் பங்கேற்பு அணியை வலுப்படுத்துகிறது நன்றி ARR. தலைவன் இருக்கின்றான் படத்திற்கு உங்களின் பங்களிப்பும் உங்களின் உற்சாகமான நிலையும் ஒரு புது உத்வேகத்தை அளிக்கிறது” என்று ட்விட்டரில் கமல் எழுதியிருந்தார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கடைசி கமல்ஹாசன் அவர்களின் படம் ‘தெனாலி’. 19 ஆண்டுகளுக்கு முன்பு இது திரைக்கு வந்தது.

Most Popular

Recent Comments