சித்தார்த் ஆனந்த் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘வார்’, யஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராப், வானி கபூர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த வருடம் அக்டோபர் 2ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. படத்தின் டீசர் வெளியானதும், மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. விஷால்-சேகர் இசையமைக்க, பென்வோலியோ ஜாப்பர் ஒளிப்பதிவு செய்கிறார்.விகாஸ் பஹல் இயக்கிய சூப்பர் 30 படத்திற்கு பிறகு ஹிரித்திக் நடிக்கும் அடுத்த படம் இது.
சூப்பர் 30, குறைந்த வசதிபடைத்த மாணவர்களுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஒரு கணிதமேதாவியர் ஆனந்த் குமாரின் கதையாகும். இந்த படத்தில் ஹ்ரித்திக் மாறுபட்ட பாத்திரத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.