இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர். இவரது முதல் படம் ‘பசங்க’, இது மிகப்பெரிய ஹிட் படைத்தது. இதை தொடர்ந்து இவர் எடுத்த அதனை படங்களும் ரசிகர்கள் மனதில் இவருக்கென்ற ஒரு நீங்காத இடத்தை பிடித்து தந்தது. தற்போது இவர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 16 படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கடைகுட்டிசிங்கம் படம் வெளிவந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இவர் சிவகார்த்திகேயன் நடித்து இவரது அடுத்த படம் ஒரு குடும்ப கதை தான் என்று கூறியுள்ளார். அதில் “கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.