பிக் பாஸ் சீசன் 3ல் 16வது போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பொழுது அபிராமி, சாக்ஷி இருவரும் மீராவை புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் மீராவிற்கு ரசிகர்களின் அனுதாபம் கிடைத்தது. ஆனால் இவர் அதன் பின் ஒவ்வொரு போட்டியாளரையும் குறை கூறிவருவதும் அவர்களின் மேல் பழிபோட்டு வருவதும் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது.
இவரின் மீது ஏற்கனவே பல பல பெண்களிடம் அழகி போட்டியில் சேர்த்து விடுவதாக கூறி பணமோசடி செய்ததாக புகார்கள் இருக்கிறது, இதனால் இவருடைய மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்ப பெறப்பட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள், பங்குபெற்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல்கள் வைரல் ஆகுவது வழக்கம். அதுபோலவே ஷெரின் நடித்த விசில் படத்தின் ‘அழகிய அசுரா’ பாடல் வைரலானது.
தற்போது மீரா மிதுன் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவர் ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதில் இவர் சில கருது வேறுபாடுகளால் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.