V4UMEDIA
HomeNewsKollywoodஅசுரன்' படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ்!

அசுரன்’ படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ்!



இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் அசுரன் திரைப்படத்தின் பாடல் உருவாகும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது .

சமீபத்தில் இந்த படத்தில் பொல்லாதபூமி எனும் பாடலை தனுஷ் , கென் கருணாஸ் , டீஜே ஆகியோர் பாடியுள்ளதாகவும், யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார் . 

இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடலை இந்த வாரம் கம்போஸ் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலை ஏகாதேசி எழுதியுள்ளதாகவும், இந்த பாடலை பாடும் நபர் குறித்த ஆச்சரிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

Most Popular

Recent Comments