V4UMEDIA
HomeNewsKollywoodவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் தனுஷ்!!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் தனுஷ்!!

‘கொடி’ படத்தின் இயக்குனர் துரைசெந்தில் குமாருடன் இரண்டாவது முறையாக  இணைந்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த படம் இவருடைய 39வது படம். இதற்கிடையில் தற்போது இவரின் ‘வடசென்னை 2’ மற்றும் ‘என்னைநோக்கி பாயும் தோட்டா’ படங்களின் வெளியீடு தேதிகள் குறித்து வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.




என்னைநோக்கி பாயும் தோட்டா மற்றும் வட சென்னை 2 படங்கள் பற்றிய தவறான வதந்திகள் வந்த வண்ணம் இருப்பதால், நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில், “எனது ரசிகர்களிடையே எதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
எனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்துதல் எதுவும் பதிவிடவில்லை எனில், என்னுடைய எந்தவொரு படம் தொடர்பான வதந்திகளையும் நம்ப வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments