மேயாத மான் படத்தை தொடர்ந்து ஆடை படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். இந்த படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீஸர் அதிக வியூஸை அள்ளியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களின் வரிசையில் ஆடை படமும் இடம் பெறுகிறது. இந்த படத்தில் அமலா பால் அவர்கள் ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஆகையால் இந்த படத்திற்கு ‘ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா அவர்கள் ௭௦ வருடங்களுக்கு முன்பு முதல் முறை பாடப்பட்ட தெய்வீக பாடலை இந்த படத்தில் அவருடைய குரலிலே பாடியிருக்கிறார். இது குறித்து ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அமலா பாலை துர்திஷ்டசாலி என்று கூறியுள்ளார், ஏனென்றால் சுசீலா அம்மாவை பார்க்க அவர் வரவில்லை என்பதால் தான் இதுபோன்ற பதிவை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த பாடலுக்கு நீங்கள் உங்களின் முழு பங்களிப்பை தருவீர்கள் என்றும் கூறியுள்ளார்.
இயக்குனரின் இந்த பதிவை ரீ டுவீட் செய்த அமலா பால் அந்த பதிவில், “ஆமாம் நான் தவறவிட்டுவிட்டான் என கண்ணீர் விடும் எமோஜியை பகிர்ந்திருக்கிறார். மேலும் ரத்னகுமாரின் கேள்விக்கு பதில் தரும் வகையில், மேலும் நீங்கள் எதிர்பார்த்ததை விடவுடம் அதிகமாக கொடுத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்றும் அமலாபால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.இந்த படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகிறது.