வைபவ் கதாநாயகனாக வரவிருக்கும் கலகலப்பு படம் “சிக்ஸர்”. சாச்சி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பலக் லால்வானி, சதீஷ், ராதா ரவி, இளவராசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரனுடன் இணைந்து வால்மேட் என்டர்டெயின்மென்ட் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். தொழில்நுட்ப முன்னணியில், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவைக் கையாளுகிறார், ஜோமின் மேத்யூ படத்தைத் எடிட்டிங் செய்கிறார்.
இந்த படத்தில் பன்முக நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பர் வைபவிற்காக ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். “எங்கவேனா கோச்சிக்கினு போ” என்ற பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடல் வரிகளை லோகன் எழுதியுள்ளார். முழு பாடல் ஜூலை 13 அன்று காலை ௧௧ மணிக்கு வெளியிடப்படுகிறது.