நடிகர் விஷ்ணு விஷால் கடைசியாக இயக்குனர் செல்லாவின் 2018ன் நகைச்சுவை படமான “சிலுக்குவாருப்பட்டி சிங்கம்” படத்தில் நடித்தார். இதில் ரெஜினா கசாண்ட்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் தற்போது தனது கைவசத்தில் அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கிறார், இதில் பிரபு சாலமனின் “காடன்” மற்றும் ‘இன்று நேற்று நாளை 2’ தவிர ‘ஜகஜலா கில்லாடி’ மற்றும் ‘#விவி18’ ஆகியவை அடங்கும்.
தனது பெற்றோரின் திருமண ஆண்டு விழாவின் நல்ல சந்தர்ப்பத்தில், நடிகர் தனது சமூக ஊடங்கங்களில் தனது அடுத்த திட்டத்தை அறிவித்தார். ஆமாம், அவர் சமீபத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படமான ‘ஜீவி’ பட இயக்குனருடன் முதல் முறையாக இணைகிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெற்றோரின் திருமண ஆண்டு விழாவில், ஜேவிவி ஸ்டுடியோஸின் ‘ஜீவி’ இயக்குனருடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி .. இயக்குநர் விஜே கோபிநாத், எழுத்தாளர் ஏபி பாபுவுடன் ஸ்கிரிப்டிங் வேலை நடந்துகொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.