V4UMEDIA
HomeNewsKollywood"மிஸ் யூ தோனி" - தோனி பற்றி பதிவிடும் மேயாதமான் இயக்குனர்!!

“மிஸ் யூ தோனி” – தோனி பற்றி பதிவிடும் மேயாதமான் இயக்குனர்!!


Related image

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியுடன் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா அணி தோல்வியை தழுவி சென்றது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது மழை காரணமாக ஆட்டம் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. 239 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி. இதை தொடர்ந்து அடுத்து களமிறங்கிய இந்தியா அணி, முதல் மூன்று ஓவர்களிலே மூன்று விக்கெட்டை இழந்தது. பின்னர் விளையாடிய ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்டிய, ஜடேஜா, டோனி என அனைவரும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இருப்பினும் டோனி ரன் அவுட் ஆகியதால் அடங பின் இந்தியா அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்தியா அணியின் தோல்வி ஒரு புறம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும். மறுபுறம் டோனியின் உலக கோப்பை கடைசி ஆட்டம் இதுவாக இருக்கிறது என்பது தான் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் நிரம்ப செய்தது. முன்னாள் இந்திய கேப்டன் ஆக இருந்த டோனி விளையாடும் கடைசி உலக கோப்பை விளையாட்டு இதுதான் என்பது வருத்தமான ஒன்றே .

இயக்குநர் ரத்னகுமார் இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பதிவில், “மீண்டும் ஒரு அரைசதம்.. இந்தியாவின் முதுகெலும்பு முடித்துக்கொள்கிறது. மிஸ் யூ தோனி. என்னுடைய குழந்தை பருவம் நிறைவடைந்துவிட்டது. நன்றி தோனி.. பயிற்சியாளராக விரைவில் வாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments