அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் தர வரிசையில் இடம் பிடித்தவர் விஜய் தேவர்கொண்டா. இவருக்கு இளைஞர்களை விட இளம் பெண்களின் ரசிகர் கூட்டம் அதிகம். இவரது படங்களில் இவரது தோற்றங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்திருக்கும். தென்னிந்தியாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வருபவர்.
![See the source image](https://img.timesnownews.com/story/1552971119-dear-comrade12.jpg)
இவரும் ராஷ்மிக்கா மடோனாவும் இணைந்து நடித்து வெளிவந்த படம் ‘கீதா கோவிந்தம்’ இதை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வெளிவரவிருக்கும் படம் ‘டியர் காம்ரேட்’. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் இடம் பெரும் காட்சிகள் அனைத்தையும் பார்க்கும் போது. இந்த படம் அர்ஜுன் ரெட்டி அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.