V4UMEDIA
HomeNewsKollywoodபோதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா - பத்திரிக்கை செய்தி

போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா – பத்திரிக்கை செய்தி

நடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணிபுரிந்தது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இது குறித்து நடிகை துஷாரா கூறும்போது, “இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையில் ஒரு சிறந்த அன்பான மற்றும் வேடிக்கையான அனுபவமாகும். உண்மையில், இந்த சுவாரஸ்யமான தருணங்கள் படப்பிடிப்பின் போது ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆரம்பத்தில், இயக்குனர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்த படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழு கதையை பற்றி கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் மையக்கரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க எனது ஆர்வத்தை தூண்டியது. இருப்பினும், இந்த படத்தை பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், ஓரிரு மாதங்களுக்கு பிறகு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்கிரிப்டை கேட்க அலுவலகத்திற்கு வர முடியுமா என்று சந்துரு சார் கேட்டார். இந்த திரைப்படத்தின் பூஜைக்கு 4 – 5 மணி நேரத்திற்கு முன்பு தான் நான் இந்த படத்துக்கு கையெழுத்திடுகிறேன் என்று கேள்விப்பட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என்றார்.

மேலும், இயக்குனர் சந்துரு குறித்து அவர் பாராட்டி பேசும்போது, “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் அவர் விரும்புவதை பெறுவதில் அவரது தெளிவு மிகவும் துல்லியமானது. இது படம் மிகச்சிறப்பாக வர வழி வகுத்தது. இருப்பினும், தொழில்நுட்ப அம்சங்களில் நான் தேர்ச்சி பெற்றவன் அல்ல என்று அவர் அவரை குறைத்து மதிப்பிட்டு கூறலாம். ஆனாலும், இறுதி வடிவத்தை எவ்வாறு சரியாக கொண்டு வருவது என்பது குறித்த தனித்துவமான பார்வை அவருக்கு உண்டு என்று நான் கூறுவேன்” என்றார்.

நாயகன் தீரஜ் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறும்போது, “அவர் மிகவும் எனர்ஜியுடனும், முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு நடிகர். ஒரு வெற்றிகரமான கலைஞர் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும், தீரஜ் அதை அதிகமாகவே வைத்திருக்கிறார். முதல் ஷாட்டில் நடிப்பவரை போலவே கடைசி நாள் படப்பிடிப்பிலும் கூட அவர் அதே ஆற்றலை கொண்டிருந்தார்” என்றார்.


ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாக படத்துக்கு பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.

Most Popular

Recent Comments