“ஜட்ஜ்மென்டல் ஹை க்யா” பாடல் வெளியீட்டு விழாவில் கங்கனா ரானத் பொழுதுபோக்கு பத்திரிகை நிருபரிடம் வாக்குவாதம் seithaar. இதனால் கங்கனா ரானத் மீது அணைத்து ஊடங்கங்களிலும் தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கங்கனா ரானத் சார்பாக புதன்கிழமை மன்னிப்பு கடிதம் ஒன்றை ஏக்தா கபூர் வெளியிட்டார்.
இந்த மன்னிப்பு கடிதத்தில் ஏக்தா கபூர், தனது படத்தின் முன்னணி நடிகை கங்கனா ரானத் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் பத்திரிகையாளரிடம் நடந்து கொண்டதற்கு சார்பாக வருத்தம் தெரிவித்தார். ஏக்தாவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக என்டர்டெயின்மென்ட் ஜர்னலிஸ்ட்ஸ் ‘கில்ட் ‘ கூறினாலும், கங்கனா ரானத் மீது விதிக்கப்பட்ட தடையை அனைத்து ஊடக தளங்களிலும் தொடரும்.
“என்டர்டெயின்மென்ட் ஜர்னலிஸ்ட்ஸ் கில்ட் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் திருமதி ஏக்தா கபூரின் ஆதரவையும் சரியானவற்றிற்காக நிற்பதையும் பாராட்டுகிறார். இருப்பினும், செல்வி கங்கனா ரானத் மீதான தடையை அனைத்து ஊடக தளங்களிலும் தொடருவோம்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
கங்கனா பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த பின்னர், அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் ட்விட்டரில் கங்கனா ஒருபோதும் ஊடகங்களுக்கு மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அவர்களை தேசவிரோதிகள் என்றும் குறிப்பிட்டார்.
ஏக்தா கபூர் மற்றும் நடிகர் ராஜ்குமார் ராவ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜட்ஜ்மென்டல் ஹை க்யாவின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது கோபமான பரிமாற்றம் நடந்தது.
கங்கனாவிடம் கேள்வி கேட்க பத்திரிகையாளர் மைக் எடுத்து சென்றபோது அவர் ராஜ்குமார் ராவ்வை கேள்வி கேட்கும் முன், கங்கனா திடீரென பத்திரிகையாளரை அவமானப்படுத்தினார். “நீங்கள். அவரைப் பற்றி பல எதிர்மறையான விஷயங்களை எழுதுகிறீர்கள். நீங்கள் என்னை ஜிங்கோயிஸ்டிக் என்று அழைக்கிறீர்கள். இந்த மனநிலையை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் “
சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர் தனக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும், தனது பிராண்டுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கங்கனா அப்போது குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர் குற்றச்சாட்டுகளை மறுத்தார், மேலும் பத்திரிகையாளர் கங்கனாவிடம், அவருக்கு எதிராக இதுபோன்ற செயல்களைச் செய்ய எந்த காரணமும் இல்லை என்றுபதிலளித்தார். தான் யாரையும் மிரட்டவில்லை என்றும், தான் நேர்மையாக இருப்பதாகவும் கங்கனா கூறினார்.