உலகநாயகன் கமல் ஹாசன் நடத்தும் பிக் பாஸ் 3 கடந்த மாதம் ஜூன் 23 அன்று தொடங்கி வெற்றிகரமாக தொடர்கிறது. முதல் இரண்டு சீசன்கள் மிகப் பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது ஒவொரு நாளும் மும்முரமாக தொடர்கிறது.
பல்வேறு தொழில்களில் உள்ள பிரபலங்கள் ஒன்றாக வந்து, வீட்டுக்குள்ளே தேவைப்படும் பல்வேறு வேலைகளையும் செய்து, 100 நாட்களுக்கு வெளியேற்றப்படாமல் பிக் பாஸ் கொடுக்கப்படும் பணிகளை செய்து, ஒரு நிறுவப்பட்ட வீட்டுக்குள் வாழ்கிறார்கள். அந்த வீட்டின் உள்ளே தினசரி நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் வெளியிடுவதின் மூலம், அது பார்வையாளர்களிடையே ஆர்வத்தை தூண்டுகிறது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ (10th ஜூலை), ஷெரின் பற்றிய தன்னுடைய கருத்தை முதல் முறையாக தர்ஷன் வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ ப்ரொமோவின் மூலம் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு காதல் காட்சி இடம் பெரும் என்பது உறுதியாகிறது.