பிக் பாஸ் சீசன் 3 தற்போது மிகவும் ட்ரெண்டாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்ட ஒரு வீட்டில் ஒன்றாக வாழும் பதினேழு போட்டியாளர்கள் கொண்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், இந்த பங்கேற்பாளர்கள் செய்ய வேண்டிய சுவாரஸ்யமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஒளிபரப்பப்பட உள்ள இந்த எபிசோட் புதிய ப்ரோமோ வெளிவந்திருக்கிறது. சக போட்டியாளர்களான சேரன், மீரா மிதுன் ஆகியோரிடையே தற்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக இந்த வீடியோ வில் தெரிகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழிச்சியில் வாரா வரம் ஏதாவது ஒரு சண்டை ஏற்படுவது சகஜமாக தான் இருக்கும். இருப்பினும் சேரன் யாரிடமும் அதிகமாக சண்டை போடுவது கிடையாது, தற்போது இவர் மீரா மீது கோவை படுவது போன்ற இந்த வீடியோ வைரலாகியுள்ளது.