தெலுங்கு உலகின் மெகா பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ராம்சரன். இவர் சிறுத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ராமச்சரன் எஸ்.எஸ்.ராஜமௌலி படமான ‘மகதீரா” (தமிழில் மாவீரன்) எல்லா மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ராம்சரன் அடுத்தடுத்து ஆரஞ்சு, ரச்சா, நாயக், எவடு முதல் வினய விதையா ராமா வரை வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
தற்போது இவர் #RRR ஜூனியர் என்டிஆர் மற்றும் ராஜமௌலியுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அவருக்கென்று தனி பக்கங்கள் கிடையாது, தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் தனது புது பக்கத்தை உருவாக்கியுள்ளார். இவரது மனைவி உபாசனாவின் பக்கத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் அவர் வரும் வெள்ளிக்கிழமை அன்று இன்ஸ்டாகிராமில் புது பதிவு அல்லது நேரலையில் வருவதாக கூறியிருக்கிறார்.
https://www.instagram.com/p/BzuiLQklHKk/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோவை அவரது உறவினர்கள் மட்டும் அவரது சினிமா வட்டாரம் பகிர்ந்து வருகிறது. இந்த வீடியோ இன்று இன்ஸ்டாகிராமில் டிரன்டிங்கில் உள்ளது. இவருடைய இந்த பதிவு இவரது ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை அளித்துள்ளது