V4UMEDIA
HomeNewsஅடுத்த படத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார் நாகர்ஜூனாவின் மகன்!!

அடுத்த படத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார் நாகர்ஜூனாவின் மகன்!!



மிஸ்டர் மஜ்னு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார், நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி. இவர் இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் அண்மையில் திருப்பதி சென்று தரிசித்து வந்துள்ளார். 

Related image

இதை தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “திருமலை எப்போதுமே நான் உள் அமைதியையும் வலிமையையும் கண்ட இடமாக இருந்து வருகிறது. ஒரு தரிசனத்திற்காக மலை வரை நடந்தேன் – ஒரு சடங்கு எனக்கு அவசியமாகிவிட்டது. தெளிவான மற்றும் கவனம் செலுத்தும் மனதுடன் புதிய படத்தைத் தொடங்க நான் எதிர்நோக்குகிறேன் . கோவிந்த கோவிந்தா, ”என்றார் அகில்.


இவர் “மிஸ்டர் மஜ்னு” படத்தில் நடித்திருக்கிறார், இவரது இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளியது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

Most Popular

Recent Comments