V4UMEDIA
HomeReviewRaatchasi Review

Raatchasi Review

Review By :- V4umedia

Release Date :- 05/07/2019

Movie Run Time :- 2.14 Hrs

Censor certificate :- U

Production :- Dream Warrior Pictures

Director :- Sy. Gowthamraj

Music Director :- Sean Roldan

Cast :- Jyothika, Poornima bhakyaraj, Sathyan , Hareesh Peradi

ராட்சசி விமர்சனம்


அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடைக்கும்.


இயக்குனர் கௌதம்ராஜ் மற்றும் எழுத்தாளர் பாரதி தம்பி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. மிக மோசமான சூழலில் இருக்கும் ஒரு அரசுப்பள்ளிக்கு நேரடி தலைமை ஆசிரியராக வருகிறார் கீதாராணி எனும் ஜோதிகா. புதிய விதிமுறைகள் வகுக்கப் படுகின்றன. இந்த மாறுதல்கள் எல்லாம் அங்கு சொகுசாக வாழ்ந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை. உடனே தலைமை ஆசிரியை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். அந்த எதிர்ப்பை கீதாராணி எப்படி சமாளித்தார் என்பதே கதை.


படத்தில் எல்லா வசனங்களுமே உண்மையை உரக்க சொல்கின்றன. எழுத்தாளர் பாரதி தம்பிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

                                                                                 
சாட்டை படத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையேயான காதல் காட்சியை காட்டி இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஆசிரியைக்கும் ஒரு சுட்டி மாணவனுக்கும் இடையேயான காதலை காட்டப்படுகிறது. அந்த சுட்டி மாணவன் வரும் காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கிறது.

ஷான் ரோல்டன் இசை என்றதும் பெரிய பலம். பாடல்கள் மற்றும் . பின்னணி இசை அருமை. வில்லனாக கவிதாபாரதி நடித்துள்ளார். அப்படியே தம்பி ராமையாவை நினைவூட்டுகிறார்.பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களை பற்றி படம் பேசுகிறது. இது மிக குறிப்பிடத் தக்க விசியம். இதுபோல இன்னும் சில காட்சிகள் புதுமையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.

Most Popular

Recent Comments

Review By :- V4umedia Release Date :- 05/07/2019 Movie Run Time :- 2.14 Hrs Censor certificate :- U Production :- Dream Warrior Pictures Director :- Sy. Gowthamraj Music Director :- Sean Roldan Cast :- Jyothika, Poornima bhakyaraj, Sathyan , Hareesh Peradi ராட்சசி விமர்சனம்அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள்...Raatchasi Review