வெளிவர இருக்கும் அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ டிரெய்லர் ரசிகர்களிடமும் பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர். இந்தி படமான ‘பிங்க்’ படத்தில் ரீ-மேக்கில் எடுக்கப்பட்டது தான் இந்த படம். இப்படத்தை சத்துரங்க வேட்டை மற்றும் தீரன் புகழ் எச்.வினோத் இயக்கியுள்ளார், மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடச்சலம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நேர்கொண்ட பார்வை இடிஎம் பாடல் ஜூலை 9 ஆம் தேதி ஆனா இன்று மாலை 6:45 மணிக்கு வெளியிட போகின்றனர். பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். தயாரிப்பாளர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (ஜூலை 9) மாலை 6:45 மணிக்கு தயாரிப்பாளர்களால் புதிய பாடல் வெளியிடப்படும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பாடல் ஈடிஎம் அடிப்படையிலான பாடல் என்று கூறப்படுகிறது, மேலும் பிரபல பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் இடம்பெறுகிறார், இவர் சமீபத்தில் கல்லி பாயில் காணப்பட்டார்.
தயாரிப்பாளர்கள் ஏற்கனவே ‘வானில் இருள்’ என்ற சிங்கிளை வெளியிட்டிருந்தனர், இது ‘ரவுடி பேபி’ பாடகி “தீ” பாடியது. யுவன் ஷங்கர் ராஜா இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு மற்றும் கோகுல் சந்திரன் எடிட்டிங் செய்கின்றனர்.