சசியின் அடுத்த படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ தணிக்கை செய்யப்பட்டு, சிபிஎப்சி அதற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அபிஷேக் பிலிம்ஸின் ரமேஷ் பி பிள்ளை அடுத்த சில வாரங்களில் வெளியிடுவதற்கு பொருத்தமான தேதியைக் பார்த்து வருகிறார்,
இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி. இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீசாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமால் ஜோஸ், தீபா ராமானுஜம், பிரேம்குமார் மற்றும் யேஷ்வந்த் கோஸ்டார் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை சித்துக் குமார், ஒளிப்பதிவு பிரசன்னா எஸ் குமார் மற்றும் சான் லோகேஷ் எடிட்டிங் செய்கின்றனர்.