ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜகன் சக்தி. இவர் தற்போது ‘மிஷன் மங்கள்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசருக்கு முருகதாஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஜகன் சக்திக்கு தெரிவித்துள்ளார்.
மிஷன் மங்கல் என்பது விஞ்ஞானி ராகேஷ் தவான் (அக்ஷய் குமார்) மற்றும் தாரா ஷிண்டே (வித்யா பாலன்) நடிப்பில் வெளிவரவிருக்கும் படம், விஞ்ஞானிகளின் மோட்லி குழுவை வழிநடத்துதலில் சவால்களை தாண்டி எப்படி வெற்றி பெறுகின்றனர் என்பது கதை. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கதை, இது நாட்டின் நம்பிக்கையை மீட்டெடுத்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாதனை.
சாதாரண மக்கள் அசாதாரணமான காரியங்களைச் செய்து, பெரிய கனவு காணவும், சாத்தியமற்றதை அடையவும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் கதை இது.
இந்த படத்தில் ராகேஷ் தவானாக அக்ஷய் குமார், தாரா ஷிண்டாக வித்யா பாலன்நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, ஷர்மன் ஜோஷி, கீர்த்தி குல்ஹாரி, நித்யா மேனன், எச். ஆர். தத்தாத்ரேஆகியோர் நடிக்கின்றனர். கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், ஹோப் புரொடக்ஷன் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தை சுதந்திர தினத்தன்று வெளியிடுகின்றனர்.