Review By :- V4umedia
Release Date :- 05/07/2019
Movie Run Time :- 2.2 Hrs
Censor certificate :- U
Production :- Varmans Productions
Director :- A. Sarkunam
Music Director :- Mani Amudhavan, V. Ronald Regan
Cast :- Vimal,Oviya,RJ Vigneshkanth , Saranya Ponvannan, Ilavarasu , Ganja Karuppu , Vinodhini Vaidyanathan , Mannai Sathik
களவாணி 2 விமர்சனம்
ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான்
களவாணி 2.
கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது, பட்டப்பகலில் ஓவியாவின் ஆட்டைத் தூக்கிக் கொண்டு போக பின்னாலேயே ஓவியா துரத்திக் கொண்டு போவது என கொடுத்த வேடத்தை சரியாக நடித்திருக்கிறார் விமல்.
கஞ்சாகருப்பு மற்றும் விக்னேஷ் ஆகியோர் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது .
ஓவியாவை இப்படத்தில் அழகாக காட்டி இருக்கிறார்கள் .
விமலின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் சரண்யாபொன்வண்ணன் ஆகியோர் இன்னொரு நாயகன் நாயகி போல படத்தில் நிறைந்து நன்றாக நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்கள்.
பிரசிடெண்ட் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களாக நடித்திருக்கும் துரை.சுதாகர் வில்லன்ராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். மணிஅமுதவன் இசையமைத்துள்ள ஒட்டாரம் பண்ணாதே பாடல் கேட்க இனிமை. பார்க்கவும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாசாணி.
கடுமையான அரசியல் நிகழ்வுகளை உள்ளூர் அரசியலை வைத்து மிக எளிமையாகக் கடந்து போக வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.சற்குணம்.