V4UMEDIA
HomeNewsKollywoodபிகில் படத்திற்கான புதிய அப்டேட் : விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

பிகில் படத்திற்கான புதிய அப்டேட் : விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இந்த படத்தில் நயன்தாரா விஜயுடன் இணைத்து நடிக்கிறார். இப்படத்தை அட்லீ எழுதி இயக்கியிருக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

Image result for bigil

‘தளபதி விஜய்’ அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இந்த படத்தின் மூன்று பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர். இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, இன்று இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்து மாலை 6 மணியளவில் வெளியிடப்போவதாக அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் அவர், “தளபதி ரசிகர்களின் பிரத்யேக புதுப்பிப்பு இன்று மாலை 6:00 மணிக்கு வருகிறது (இது சிங்கிள்/ டீஸர் / டிரெய்லர் / ஆடியோ வெளியீட்டு தேதி / படம் வெளியீட்டு தேதி பற்றியது அல்ல) நாம் அனைவரும் ஏதோவொன்றுக்காக காத்திருக்கிறோம், இந்த அப்டேட் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். யூகிக்கத் தொடங்குங்கள் காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஜி. கே. விஷ்ணு படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார், படத்தின் எடிட்டிங் ரூபென் கையாளுகிறார். இசை புயல், ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படம், வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரித்துள்ளார். இது அட்லீ-விஜய் இணையும் மூன்றாவது படம் இது.

Most Popular

Recent Comments