தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இந்த படத்தின் 3 பர்ஸ்ட் லுக்குகளும் விஜய் அவர்களின் பிறந்தநாள் அன்று, பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களால் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்து மாலை 6 மணியளவில் வெளியாடப்போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், “தளபதி ரசிகர்களின் பிரத்யேக புதுப்பிப்பு இன்று மாலை 6:00 மணிக்கு வருகிறது (இது சிங்கிள்/ டீஸர் / டிரெய்லர் / ஆடியோ வெளியீட்டு தேதி / படம் வெளியீட்டு தேதி பற்றியது அல்ல) நாம் அனைவரும் ஏதோவொன்றுக்காக காத்திருக்கிறோம், இந்த அப்டேட் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். யூகிக்கத் தொடங்குங்கள் காத்திருங்கள்” என இருந்தது.
தற்போது இந்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக தளபதி விஜய் அவர்கள் ‘பிகில்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் பெயர் ‘வெறித்தனம்’ என பதிவிட்டுள்ளார். அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இந்த தகவலுடன் புகை படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தளபதி விஜய், இசை புயல் ஏ ஆர் ரஹ்மான், இயக்குனர் அட்லீ மற்றும் பாடலாசிரியர் விவேக் ஸ்டுடியோவில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.