சமந்தா ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். எஸ். எஸ். ராஜமௌலி அவர்கள் இயக்கிய “நான் ஈ” படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் தமிழிலும் தெலுங்கிலும் நிறைய முன்னணி கதாநாயகர்களுடன் இணைத்து நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழ் தெலுங்கில் வெளி வர இருக்கும் திரைப்படம் ‘ஓ பேபி’. இவர் இந்த படத்தில் நடிகை லட்சுமியுடன்
இணைந்து நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 5-ம் தேதி திரைக்கு வந்தது பி .வி .நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் சமந்தாவின் படங்களிலிருந்து மாறுபட்ட ஒன்று. சமந்தா நடிப்பில் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொண்ட படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. திரைக்கு வந்த சில நாட்களிலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல நடிகர்கள் சமந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அல்லு அர்ஜுன்
படம் பற்றி வெறுமனே டுவீட் செய்வதற்கு பதிலாக, சமந்தாவிற்கு பூச்செண்டு மற்றும் ஒரு பாராட்டு மடலையும் அனுப்பியுள்ளார். இளஞ்சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஒரு செடியை அனுப்பினார். நடிகை இன்ஸ்டாகிராமில் , பூங்கொத்துடன் ஓரிரு படங்களையும், நடிகர் அல்லு அர்ஜுன் கையால் எழுதிய பாராட்டு மடலையும் பகிர்ந்துள்ளார். அவர் நடிகைக்கு அனுப்பிய தாவரத்தின் ஒரு கிளையில் குறிப்பு தொங்கவிடப்பட்டது. அதில், “பூக்களும் மற்றும் அழைப்புகளினால் உங்கள் வெற்றிக்கான பாராட்டுகள் இல்லை. உங்கள் திரைவாழ்க்கையின் வளர்ச்சிக்கேற்ப அழகாக வளரும் ஒன்று!” என அந்த குறிப்பில் எழுதி மற்றும் அதற்கு கீழ் “ஏஏ” என கையெழுத்திட்டிருந்தார்.
அல்லு அர்ஜூனுடன் இணைந்து சமந்தா “சன் ஆப் சத்யமூர்த்தி” படத்தில் நடித்துள்ளார்.