அமலா பால் நடிப்பில் ‘மேயாத மான்’ இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ஆடை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீஸர் வெளியாகி அதிக வியூஸை அள்ளியுள்ளது. இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களின் வரிசையில் ஆடை படமும் இடம் பெறுகிறது. இந்த படத்தில் அமலா பால் அவர்கள் ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஆகையால் இந்த படத்திற்கு ‘ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் தனது டுவிட்டர் பதிவில் ஆடை படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ” இறுதியாக… ஆடை படம் ஜூலை 19ஆம் வெளியாகிறது, காமினியின் உலர்க்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” என ஆங்கிலத்தில் பதிவிட்டு போஸ்டர் உடன் பகிர்ந்துள்ளார்.