V4UMEDIA
HomeNews'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்கும் 'பாலயா'!!

‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ‘பாலயா’!!

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகண்ட படம் ‘பிங்க்’. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா பரிசீலிக்கப்பட்டு வருகிறார். பிங்கில் அமிதாப்பின் பாத்திரம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பாத்திரங்களில் ஒன்றாகும். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. தமிழ் ரீமேக்கில் அமிதாப் பச்சன் அவர்களின் கதாபாத்திரத்தில் அஜித் அவர்களும் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் “ஜெர்சி” பட புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடம்பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு ரீமேக் செய்ய மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தெலுங்கு ரீமேக்கிற்கான நடிகை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பாலயாவுடன் ஒருபோதும் பணியாற்றாத தில் ராஜு, அமிதாப்பின் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். சிம்ஹா போன்ற படங்களில் பெண்கள் பற்றிய பாலையா உரையாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், தில் ராஜு பாலையாவை இந்த படத்தில் நடிக்க வேண்டும் என விரும்பிகிறார். இருப்பினும், ராஜு இன்னும் பாலையாவை அணுகவில்லை.

ஒருவேளை பாலயா இந்த படத்திற்கு ஒப்பந்தம் ஆகவில்லை என்றால் நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற மற்ற முன்னணி நடிகர்களிடம் தில் ராஜு அணுகுவார் என திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது .

Most Popular

Recent Comments