V4UMEDIA
HomeNewsKollywoodஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”.

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”.

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சீனிவாசன். சண்டைப்பயிற்சி – “க்னாக் அவுட்” நந்தா. எடிட்டிங் – துர்காஸ். நடனம் – சர்வஜித், பாடல்கள் – ஆதவன் மற்றும் NTC.சரவணன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பதினேழே வயது நிரம்பிய ஆதவன்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியாதாவது, “ பார்வையற்ற தந்தையை கவனித்துகொள்ளும் மகனை பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்குமான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். நன்கு பாடத்தெரிந்த ஒரு கிராமத்து இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைத்துறைக்குள் வந்து மிகப்பெரிய உச்சத்தை அடைகிறான். ஆனால் இந்த வெற்றியே அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம். படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் இராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தில் குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில்  பக்திப்பாடல் ஒன்று இப்படத்தின் மூலம் வெளிவர உள்ளது.  இந்த பாடலை அம்மன் மற்றும் முருகனுக்கு இணைந்து சமர்பிக்கும்படி தீனா இசையமைத்துள்ளார், இப்படத்தினை தணிக்கை குழுவினர் பார்த்து, பாராட்டி, இப்படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார்.

Most Popular

Recent Comments