தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன் இவரது படங்கள் அனைத்துமே ஹிட் படங்களாகும். சமூக வலைத்தளத்தில் அதிக பாலோவர்ஸை கொண்ட தென்னிந்தியா நடிகர் இவரே. இவர் ராணுவ வீரராக நடித்த “நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா” 2018ல் வெளியானது. இதை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து அல்லு அர்ஜுன் தற்போது த்ரிவிக்ரம் அவர்களுடன் இணைந்து #AA19 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தமிழ் நடிகை நிவேதா பேத்துராஜூம ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது அல்லு அர்ஜுன் அவர்கள் கேரவன் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த சரவனிற்கு மட்டும் அல்லு அர்ஜுன் 7 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். இவரது இந்த கேரவன் புகைப்படங்களை அல்லு அர்ஜுன் அவர்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அவர்கள் அந்த கேரவனிற்கு “ஃபால்கான்” என பெயரிட்டுள்ளார்.
இவர் இவரது டுவிட்டர் பக்கத்தில் அவரது கேரவன் புகைபடங்களை பகிர்ந்து, அதில் ” ஒவ்வொரு முறையும் என் வாழ்க்கையில் பெரிதாக எதையாவது வாங்குகிறேன்… என் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஓடுகிறது… மக்களின் அதீத அன்பின் சக்தி தான் எனக்கு அனைத்தையும் வாங்க முடிகிறது…” ❤ அனைவருக்கும் நன்றி. அது என் கேரவன். அதற்கு “ஃபால்கான் ” என்று பெயரிட்டுள்ளேன். இந்த அளவிற்கு அழகுடிய “ரெட்டி கஸ்டம்ஸ்” அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.