சூர்யா அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் ‘காப்பான்’ இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, போமன் இரானி, சயீஷா ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் என்ற சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
‘காப்பான்’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிளான சிரிக்கி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர். இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு உள்ளனர். சூரியா பல்வேறு கெட்அப்களில் இருந்த படத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் முன்பு வெளியிட்டிருந்தனர். இப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தின் தெலுங்கு தலைப்பை புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் வெளியிட்டார். பந்தோபாஸ்ட் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வரவிருக்கும் படத்தின் ஆடியோ உரிமைகளை சோனி மியூசிக் சவுத் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தனர்.