சீயான் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் ‘சாமி 2’. அதன் பின்னர் இவர் ‘தூங்கவனம்’ புகழ் ராஜேஷ் எம்.செல்வா எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர்படத்தில் ஒப்பந்தமாகினார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியீடு செய்தனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மலையாள நடிகை லீனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தொழில்நுட்ப முன்னணியில், கடாரம் கொண்டான் சீனிவாஸ் குத்தாவால் படமாக்கப்பட்டது, தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் இந்த படத்தை எடிட்டிங் செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி ஸ்கோர் இடம்பெற்றுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. அமலா பாலின் ஆடை திரைப்படமும் ஜூலை 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.