V4UMEDIA
HomeNewsKollywood"கமல் படத்தின் ரீ மேக்கில் நான் நடிக்க விரும்பும் படங்கள் " - விக்ரம்!!

“கமல் படத்தின் ரீ மேக்கில் நான் நடிக்க விரும்பும் படங்கள் ” – விக்ரம்!!

சீயான் விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’. இந்த படத்தின் டீசேர்வேலியாகி மக்களின் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. இடை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு ஜூலை 4 ஆன நேற்று தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் விக்ரம் படம் பற்றி பேசினார், கடாரம் கொண்டானின் தயாரிப்பாளர் கமல்ஹாசனைப் பார்த்து தான் பிரமித்து போவதாகவும். மேலும் அவர், “நான் எந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் 16 வயதினிலே மற்றும் சப்பனியின் பாத்திரம் என்று கூறுவேன். இது அழகாக வழங்கப்பட்ட கதாபாத்திரம். அவர் (கமல்ஹாசன்) அந்த பாத்திரத்தை மிகவும் அழகாக அவர் நடித்திருந்தார்.”

Related image

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு விக்ரம் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் “படம் பற்றி என்னிடம் கூறும் போது நான் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டேன், தனித்துவமான முறையில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். துருவ நட்சத்திரத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலானது, அதேபோல் கடாரம் கொண்டானில் எனது பாத்திரமும் மாறுபட்டது” என்று அவர் கூறினார்.

Most Popular

Recent Comments