‘என்னை அறிந்தால்’, ‘குற்றம் 23’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அருண்விஜய் தற்போது ‘பாக்சர்’, ‘சாஹோ’ படங்களில் நடித்து வருகிறார்.தற்போது, கார்த்திக் நரேனின் படமான ‘ மாபியா ‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாகவும், பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இது குறித்து கார்த்திக் நரேன் அவர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில், “அருண்விஜய் அவர்கள் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மாபியா படத்தை இயக்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு கேங்ஸ்டர் படம்” என பதிவிட்டுள்ளார்.