HomeNewsKollywoodஇன்று நேற்று நாளை 2 படத்தின் மூலம் இணையும் விஷ்ணு விஷால் -கருணாகரன்!!

இன்று நேற்று நாளை 2 படத்தின் மூலம் இணையும் விஷ்ணு விஷால் -கருணாகரன்!!


‘டைம் டிராவல்’ என்பதை மையப்படுத்தி வெளிவந்த படம் தான் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கினார். இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையாகாது. மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்போவதாக கூறி வந்தனர்.

See the source image


நேற்று இதை உறுதி படுத்தும் வைகையில் தயாரிப்பாளர் சி வி குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார், அதில் அவர் ” ‘இன்று நேற்று நாளை’ அடுத்த பாகத்தில் விஷ்ணுவிஷால் கருணாகரனுடன் இணைய உள்ளோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.


இந்த படம் விஷ்ணு விஷால் அவர்களுக்கு 17வது படம் . இந்த படத்தை திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தை இயற்றிய ரவிக்குமார் இந்த படத்தின் இயக்குனர் ஆவார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments