Home Review House Owner Review

House Owner Review

Review By :- V4uMedia

Release Date :- 28/06/2019

Movie Run Time :- 1.49 Hrs

Censor certificate :- U

Production :- Monkey Creative Labs

Director :- Lakshmy Ramakrishnan

Music Director :- Ghibran

Cast :- Kishore, Sriranjini, Kishore DS, Lovelyn Chandrasekar,

சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் வயதான தம்பதியரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட  படம் ஹவுஸ் ஓனர்

வயதான தம்பதியினரான வாசு (கிஷோர்) மற்றும் ராதா (ஸ்ரீ ரஞ்சினி) ஆகியோரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த படத்தின் கதை. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வாசு, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ராதா தனது கணவனை பார்த்துக்கொல்லும் பொறுப்புள்ள மனைவி. மேலும் ராதா தனது கணவரின் பிடிவாதமான மற்றும் குழந்தை போன்ற நடத்தைகளில் மனம் உடையாமல் கணவனுடன் அன்பாக வாழ்ந்து பழகுபவர். பெரும்பாலான நேரங்களில், இந்த படத்தின் காட்சிகள் ஃப்ளாஷ்பேக் எபிசோட்களைத் காட்டுகின்றனர். 

Related image

ஒரே வீட்டில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது , இடையிடையே இந்த தம்பதியரின் இளம் வயது காதல் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இளம் வயது தம்பதியராக, ‘பசங்க’ கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளனர்.


Image result for house owner movie


அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கணவனை குழந்தை போல பார்த்து கொள்கிறார் ஸ்ரீரஞ்சனி. வாசு- ராதா இடையேயான காதல் படத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. கதைக்களம் முற்றிலும் 4 கதாபாத்திரத்தையே மையமாக கொண்டுள்ளது.

2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்ற இந்த தம்பதி வீட்டிற்குள்ளேயே மாட்டிகொள்கின்றனர். அதை தொடந்து அந்த வெள்ளத்தில் இருந்து தம்பதியினர் உயிர் பிழைக்கின்றனரா என்பது மீதி கதை. படத்தில் கடைசி 20 நிமிடங்கள் நம்மை கதையோட நகர வைக்கிறது. கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவும் கிப்ரானின் இசையும் படத்தின் பிளஸ் பாயிண்ட்.