ஹாலிவுட் திரைப்படத்துறை வழங்கும் அகாடமி விருதுகள் உலக சினிமாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. ஆஸ்கார் விருது விழாவில் வற்றி வாகை சூடுவது அவ்வளவு எளிதென்று கூறமுடியாத ஒன்று. சமீபத்திய விமர்சனங்களுக்கு பின்னர், நடுவர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அவர்களின் அணுகுமுறையை பன்முகப்படுத்த அகாடமி முடிவெடுத்துள்ளது.

இந்திய சினிமாக்களில் இருந்து சமீபத்தில் வந்த உறுப்பினரும், குறிப்பாக தமிழ் சினிமா இயக்குனர் ஷங்கரின் 2.0, எஸ். எஸ் ராஜமௌலியின் பேண்டஸி வகையான பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் விஷுவல் எஃபெக்ட் மேற்பார்வையாளரான ஸ்ரீநிவாஸ் மோகன் தற்போது ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டுளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,” உங்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி, நான் ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டுளேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தி இந்திய சினிமாவிற்கு பெருமைக்குரிய தருணமாகும். தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் பிரதானமாக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் மோகன், விஷுவல் எஃபெக்ட் என்ற பிரிவில் நடுவர் குழுவில் அங்கம் வகிக்கப்பட உள்ளார். சிவாஜி, எந்திரன், பாகுபலி தொடர்கள் போன்ற படங்களின் விஎஃப்எக்ஸ் கலைஞருக்கு அவரது தளமான சிறப்புகள் பற்றி தெரியும்.
திரைப்பட இயக்குனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீநிவாஸ் காஷ்யப் உடன், இந்த கிளப்பில் இயக்குனர்கள் ரித்தேஷ் பத்ரா, ஜோயா அக்தார், நடிகர் அனுபம் கெர் மற்றும் விஎஃப்எக்ஸ் ஆர்டிஸ்ட் ஷெர்ரி பார்கா உள்ளிட்ட இந்திய திரையுலகினர் இதில் அடங்குவர்.