நடிகர் விஜய் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் ‘பிகில்’ இந்த படத்தில் நயந்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை அட்லீ எழுதி இயக்கியிருக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
ஜி. கே. விஷ்ணு படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார், படத்தின் எடிட்டிங் ரூபென் கையாளுகிறார். இசை புயல், ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படம், வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரித்துள்ளார். இது அட்லீ-விஜய் இணையும் மூன்றாவது படம் இது.
பிரபல விநியோக நிறுவனமான ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மெண்ட், தமிழ்நாடு தியேட்டர் உரிமை பெற்றுள்ளது, இந்த படம் பற்றிய சமீபத்திய அதிகாரபூர்வ அப்டேட், யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டூடியோ வெளிநாடு தியேட்டர் உரிமை பெற்றுள்ளது.