‘வருத்தபடாத வாலிபர் சங்கம் ‘, ‘ ஜீவா ‘ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. சென்னை மற்றும் பிற நகரங்களில் நீர் நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீ திவ்யா பதிவிட்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் , அவர் “21 இந்திய நகரங்கள் 2020ல் ண்ணீரின்றி தவிக்கும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னை, இந்தியாவின் 6வது மிகப்பெரிய நகரம் என சிஎன்என் கூறுகிறது …
தென்மேற்கு பருவமழையின் தற்போதைய மழை பற்றாக்குறை 38%-IMD….
இந்தியா தனது நீர் நெருக்கடியை தீர்க்க வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ளது!!” என பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் தனது அடுத்த பதிவில், “நெருக்கடியை சமாளிப்பதற்கான ஐடியாக்களை முன்வைத்துள்ளார். இங்கே நாம் தண்ணீரை சேமிக்க நம் அன்றாட வாழ்வில் பின்பற்ற எளிய வழிமுறைகளை பகிர்ந்திருக்கிறேன், உங்கள் குடும்பம், நண்பர்கள், குழந்தைகள், விழிப்புணர்வு கொண்டுவரவும், மேலும்இதை நாம் அனைவருக்கும் பகிர்ந்து…
நாம் ஒன்றிணைந்து இந்த தண்ணீர் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளலாம்!” என பதிவிட்டுள்ளார்