‘வனமகன்’, ‘கஜினிகாந்த்’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சாயீஷா, இவர் பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யா மற்றும் சாயீஷா இணைந்து கே. வி. ஆனந்தின் அடுத்த ஸ்பை த்ரில்லர் படத்தில் இந்த ஜோடி இணைந்து நடிக்கின்றனர்.

சாயீஷா சமீபத்தில் தனது ட்விட்டரில் , “ஒன்றா ரெண்டா ஆசைகள்” என பாடி தனது பாடல் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். மேலும், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், பிரபல இந்தி திரைப்பட நடிகர் பிஸ்மான் இரானி, சூர்யாவுடன் இணைந்து, தற்போது “காப்பானில்” பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இந்த பதிவில் இவரது வீடியோவுடன் “ஷூட்டிங்கிற்கு இடையே இந்த பாடலை பாடுகிறேன், எனக்கு மிகவும் பிடித்த பாடல். பயிற்சி பெறாத பாடியதற்கு மன்னிக்கவும்! ” என தலைப்பிட்டார்.















