கலைஞர்கள் பலர் தங்களின் திறமை கொண்டு அதில் தனித்துவம் பெற்று நிறைய சாதனைகளை செய்து வருவர். இந்த வரிசையில் மிகவும் பிரபலமான வீணை இசை கலைஞர்
ராஜேஷ் வைத்யா இடம் பெற்றுள்ளார்.
இவர் வீணை வாசிப்பதில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர். அண்மையில் இவர் செய்த சாதனையில் இவருக்கு ஆசியா புக் ஆப் ரெகார்டில் இடம் பெற செய்துள்ளது. தனியார் ஓட்டல் ஒன்றில் இவர் தன்னுடைய இசை குழுவினருடன் ஒருங்கே இணைந்து ஒரு மணிநேரத்தில் அதாவது 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வாசித்து காண்பித்து சாதனை படைத்தார். இந்த சாதனை நிகழ்வை செய்த இவருக்கு அதே மேடையில் இவருக்கு இத்தககைய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ராஜேஷ் வைத்யாவின் சாதனை நிகழ்ச்சியில் பிரசன்னா, சுஹாசினி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.