சீயான் விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் “கடாரம் கொண்டான்” இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மக்களின் வரவேற்பை சம்பாரித்தது. ஒரு காலத்தில் சோழ ராஜ்யத்தால் படையெடுக்கப்பட்ட மலேசியாவில் அமைந்துள்ள நகரம் தான் கடாரம்.
இந்த படத்தின் ட்ரைலர் ஜூலை 3 ஆன நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அண்மையில் கூட விக்ரம் அவர்களின் டப்பிங் பகுதி நிறைவடைந்தது என டுவிட்டரில் பதிவிட்டனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இணையமைக்கிறார்.