V4UMEDIA
HomeNewsKollywoodதேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்!!

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்!!

அலைபாயுதே,மின்னலே, ரன், பிரியமான தோழி, டும் டும் டும் என நிறைய படங்களில் நடித்தவர் தான் நடிகர் மாதவன். இவர் பொலிவுட்டிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டின் சாக்லேட் பையன், மேடி என்று மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர. இவருடைய மகன் வேதாந்த் என்ற 13 வயதுடைய மகன் இருக்கிறார். தனது மகனை எண்ணி பெருமையில் ஆழ்ந்துள்ளார் மாதவன். . இவரது மகன் ஜூனியர் நேஷனல்ஸ் நீச்சல் போட்டியில் 3 தங்கங்களையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

R Madhavan

இடை தனது டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மாதவன், இது பற்றி அவர் கூறுகையில் ” உங்கள் அனைவரின் ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளினால், வேதாந்த் எங்களை மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளார்… ஜூனியர் நேஷனல்ஸ் நீச்சல் போட்டியில் 3 தங்கங்களும் ஒரு வெள்ளியும். அவரது முதல் தேசிய பதக்கங்கள். அடுத்தது ஆசியா தான். ஜிஏஎப் MUMBAI மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BzWv_wTDnQP/?utm_source=ig_web_copy_link

எனவே, இப்போது வேதாந்த் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். 2018 ஆம் ஆண்டிலும், தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக தனது முதல் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments