90 களில் சீவலபெரி பாண்டி, கிழக்கு சீமையிலே, தென்காசி பட்டினம், எஜமான், விருமாண்டி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன், பல திரைப்படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார், மேலும் அண்மையில் சீமராஜா திரைப்படத்தில் காணப்பட்டார். எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதியும் அளவிற்கு கடைகளை தேர்ந்தேடுப்பவர் நடிகர் நெப்போலியன் அவர்கள்.
ஹாலிவுட் திரைப்படமான டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜில் நெப்போலியன் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த படம் ப்ரோமோஷன் அதிகம் இல்லாமல் வெளியிடப்பட்டதால், இந்த படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. இப்போது இவர் இரண்டாவதாக ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்திற்கு ‘கிறிஸ்மஸ் கூப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் டெல் கே கணேசன் நெப்போலியனின் நண்பராக நடித்திருக்கிறார், டேனியல் நுட்சன் இயக்கியுள்ள இப்படத்தில் நெப்போலியன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் விளையாட்டு ஏஜென்ட்டாக நடித்துள்ளார்.