சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து பின்னர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். பிரியா பவானி ஷங்கரிற்கு சின்னத் திரையிலிருந்தே ரசிகர் பட்டாளம் அதிகம், அண்மையில் இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார்.
பிரியா பவானி சங்கர் சமூக ஊடங்கங்களில் அடிக்கடி அவரது வீடியோ மற்றும் படங்களை பகிர்வார், இது அவருடைய ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். இவர் தற்போது இவருடைய ஜிம் பயிற்சியாளருக்கு பயிற்சி அளிப்பது போன்ற ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”நாங்கள் எங்கள் பயிற்சியாளரைப் பயிற்றுவிக்கும் போது எடுத்த வீடியோ இது, கர்மா ஒரு பூமராங் என்பர்” என்று வீடியோவை பதிவிட்டு ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார். வீடியோவில் பிரியா எடையைச் சேர்ப்பதையும், தனது பயிற்சியாளரை இடுப்புத் துடிப்புகளைச் செய்வதையும் காண்பிக்கப்படுகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.