HomeNewsKollywoodவெளியானது ஆடை படத்தின் 'லிரிக்' வீடியோ!!

வெளியானது ஆடை படத்தின் ‘லிரிக்’ வீடியோ!!

அமலா பாலின் வரவிருக்கும் திரைப்படமான ஆடையின் டீஸர் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த படம் பலமொழிகளில் வெளிவர இருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், அமலா பாலின் ஆடை பட டீஸரை வெளியிட்டிருந்தார். இந்த டீஸர் ஒரு வாரத்தில் யூடியூப்பில் 6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை அள்ளியுள்ளது. மேலும் பல திரைப்பட பார்வையாளர்கள் அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 1.36 நிமிட டீஸர், அதில் அமலாபாலின் நடிப்பை ரசிகர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இதற்கு இசையமைத்துள்ளார், விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவை கையாண்டுள்ளார், ஷாஃபிக் முகமது அலி படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார்.


ஜூலை 1ஆன இன்று இந்த படத்துடைய ‘நீ வானவில்லா’ பாடலின் லிரிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பாடியவர் பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன், பாடலின் வரிகளை பரத் ஷங்கர் எழுதியுள்ளார்.ஒரு அனிமேட்டட் லிரிக் வீடியோவாக இதை பகிர்ந்துள்ளார். இந்த அனிமேட்டட் லிரிக் வீடியோவில் ஒரு பெண் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி அனிமேட்டட் செய்துள்ளனர். இந்த அனிமேட்டட் வீடியோவின் ஒரு பகுதியில் காட்டப்படும் அனிமேட்டட் பெண், அமலா பால் ஒரு போஸ்டரில் உடலின் பாகங்களை பயன்படுத்திய கழிப்பறை காகிதங்களுடன் மூடியது இந்த பெண்ணையும் சித்தரித்துள்ளனர். 

Related image

லிரிகள் வீடியோ வெளிவந்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான வியூஸை அள்ளியுள்ளது. இந்த படத்திற்கான வரவேற்பு இந்த திரை குழுவின் ஒவ்வொரு வெளியீட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்த படம் ஜூலை 19 திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments