V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாரதிராஜா!!

இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாரதிராஜா!!

தமிழ் சினிமா துறையில் இயக்குநர்களுகென்று ஒரு தனி தமிழ் இயக்குனர்கள் சங்கம் இருந்து வருகிறது. அண்மையில் இந்த சங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் சங்கத்திற்கென்ற மூத்த தலைவராக முதல் மரியாதை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள் என பல படங்களை இயக்கிய பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜூலை 1 ஆன இன்று, தற்போது இயக்குனர்கள் சங்க தலைவராக இருக்கும் பாரதிராஜா அவர்கள் அவருடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை ஒன்றை வெள்ளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலுக்கு, பேரம்பும் என்றும் தொடரும்…” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments