அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விளம்பரம் உள்ளிட்டவைகளில் பிஸியாக உள்ளார்.
இவர், தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவை, 2015ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். நிஷா கர்ப்பமான விஷயத்தை சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்த கணேஷ், சமீபத்தில் நிஷாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி, அதுதொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்துருந்தார்.
இந்நிலையில் கணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, குழந்தையின் விரலை பிடித்தப்படி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.