V4UMEDIA
HomeNewsKollywoodகடாரம் கொண்டான் படத்தின் டப்பிங் முடித்தார் விக்ரம்!!

கடாரம் கொண்டான் படத்தின் டப்பிங் முடித்தார் விக்ரம்!!

சீயான் விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் “கடாரம் கொண்டான்” இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மக்களின் வரவேற்பை சம்பாரித்தது. ஒரு காலத்தில் சோழ ராஜ்யத்தால் படையெடுக்கப்பட்ட மலேசியாவில் அமைந்துள்ள நகரம் தான் கடாரம்.

இந்த படத்தின் சமீபத்திய செய்தி என்னவென்றால், விக்ரம் தனது பகுதிகளுக்கான டப்பிங் பேசி முடித்துவிட்டார். உலகநாயகன் நடிப்பில் வெளிவந்த “தூங்கவனம்” பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மூத்த நடிகர் நாசரின் மகன் அபி நடித்துள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ட்ரீடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார் . ஸ்ரீனிவாஸ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார்.

Most Popular

Recent Comments